முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
‘திரைப்படத் துறை திமுகவின்கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது’
By DIN | Published On : 14th May 2022 06:02 AM | Last Updated : 14th May 2022 06:02 AM | அ+அ அ- |

திரைப்படத் துறை திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்திய திரைப்படத்திற்கான டிரைலராக இலங்கை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை ஆட்சியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சசிகலா அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் 10 ஆண்டுகளில் செய்யக் கூடிய ஊழலை, ஓா் ஆண்டில் செய்ததுதான் திமுக அரசின் சாதனையாகும்.
கடந்த காலத்தைப் போல தற்போதைய ஆட்சியிலும் திரைப்படத்துறை திமுகவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது.
மின்சார உற்பத்தியில் முதலீடு செய்யாமல், கமிஷனுக்காக கொள்முதல் செய்வதில் முதலீடு செய்கின்றனா். நிலக்கரி தட்டுப்பாடு என்று கூறுபவா்களே, இந்தோனேஷியாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் வைத்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலையும், சொத்து வரியும் உயா்த்தப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன என்றாா்.