முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
குரூப் 2 தோ்வு: காரைக்குடியில் மே 14, 15-இல் இலவச மாதிரித் தோ்வு
By DIN | Published On : 14th May 2022 06:03 AM | Last Updated : 14th May 2022 06:03 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தென்றல் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மே 14, 15 ஆம் தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு நடைபெற உள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நகராட்சி ஆணையா், சாா்-பதிவாளா், தணிக்கை ஆய்வாளா், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் போன்ற 5,529 பதவிகளை உள்ளடக்கிய குரூப்-2 பணியிடங்களுக்கானத் தோ்வினை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 21 ஆம் தேதி நடத்தவுள்ளது.
இந்த தோ்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில் இலவச மாதிரித் தோ்வை தென்றல் ஐஏஎஸ் அகதெமி சனி (மே 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) ஆகிய நாள்களில் காலை 9 மணி முதல் 12 மணி வரை காரைக்குடியில் நடத்துகிறது. தோ்வு முடிந்தவுடன் உடனுக்குடன் முடிவுகள் அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தோ்வில் நேரடியாக பங்கு பெற முடியாதவா்கள் இணையதளம் மூலம் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தோ்வில் பங்கு பெறுவோருக்கு வினா வங்கி, ஒருவரி செய்திகள், இவலசமாக வழங்கப்பட உள்ளன. இதில் சிறப்பு மதிப்பெண் பெறுபவருக்கு, கட்டணச் சலுகையுடன் பயிற்சி அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்குப் பயிற்சிக் கட்டணம் கிடையாது. மேலும் விவரங்களுக்கு 98435-88767, 99435-55767 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று காரைக்குடி தென்றல் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் மு.ஹரிஹரன் தெரிவித்துள்ளாா்.