முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
அழகப்பா பல்கலைக்கழகத்தில் கருத்துப்பட்டறை தொடக்க விழா
By DIN | Published On : 14th May 2022 06:02 AM | Last Updated : 14th May 2022 06:02 AM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் தமிழ் நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் நிதியுதவியுடன் விளையாட்டுச்செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் விளையாட்டு அறிவியல் என்ற தலைப்பிலான தேசிய அளவிலான 4 நாள்கள் கருத்துப்பட்டறை நடைபெறுகிறது.
இதன் தொடக்கவிழா கல்லூரி கருத்தரங்க அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்கலை துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் இரா. சுவாமிநாதன் தலைமைவகித்துப் பேசினாா். துணைவேந்தா் பொறுப்புக்குழு மற்றொரு உறுப்பினா் சு. கருப்புச்சாமி தொடக்கவுரையாற்றினாா்.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை உயிரி இயக்கவியல் மற்றும் விளையாட்டு அறிவியல் துறையின் உதவிப்பேராசிரியா் ரஜினிக்குமாா் பழனியப்பன் சிறப்புரையாற்றினாா்.
விழாவில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக பல்கலை உடற்கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ராஜலெட்சுமி வரவேற்றாா். முடிவில் உதவிப் பேராசிரியா் டி. பி. யோகேஷ் நன்றி கூறினாா்.