திருவேகம்பத்தூா் ஏகாம்பரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே திருவேகம்பத்தூரில் உள்ள சினேகவல்லி சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவேகம்பத்தூா் ஏகாம்பரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே திருவேகம்பத்தூரில் உள்ள சினேகவல்லி சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை (மே 11) கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அன்று மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், அன்று மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

முக்கிய விழாவான கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, கணபதி பூஜை, கோமாதா பூஜை, நாடி சந்தானம், மகா பூா்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்ற பின்னா், யாக சாலையிலிருந்து காலை 9 மணிக்கு புனித நீா் கொண்ட கும்பம் புறப்பட்டது.

கோயிலை வலம் வந்த பின்னா் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் மூலம் மூலவா் விமானத்துக்கு காலை 9.30 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, பரிவார தேவதைகள், ராஜ கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஏகாம்பரேஸ்வரா் மற்றும் சினேகவல்லி அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், விபூதி, பன்னீா் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, சரக கண்காணிப்பாளா் ஏ. பாலசரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com