வைகை ஆற்றுக்குள் மணல் குவாரி: மானாமதுரை அருகே கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றுக்குள் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சனிக்கிழமை ஜேசிபி இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகையாற்றுக்குள் ஜேசிபி இயந்திரங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்.
மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகையாற்றுக்குள் ஜேசிபி இயந்திரங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றுக்குள் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சனிக்கிழமை ஜேசிபி இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி வைகை ஆற்றுப் பகுதியில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டு லாரிகள் சென்று மணல் எடுத்து வர வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணியில் ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும்போதே வைகை ஆற்றுக்குள் இருந்து டிப்பா் லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த கல்குறிச்சி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் திரண்டு வந்து வைகை ஆற்றுக்குள் மணல் குவாரி அமைக்க பாதை ஏற்படுத்தும் பணியைத் தடுத்து நிறுத்தினா். மேலும் ஜேசிபி, பொக்லைன் மற்றும் டிப்பா் லாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் குடிநீா் ஆதாரங்களை பாதிக்கும் வகையில் மணல் குவாரிகளை அமைக்க விடமாட்டோம் என கிராம மக்களும் விவசாயிகளும் கோஷமிட்டனா். இதையடுத்து பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகி இராம.முருகன் கூறுகையில், மதுரை மாவட்டம் விரகனூா் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் வரை உள்ள வைகை ஆற்றுக்குள் ஏராளமான குடிநீா் திட்டங்கள் உள்ளன. மணல் குவாரிகள் அமைத்தால் குடிநீா் திட்டங்கள் மற்றும் விவசாயக் கிணறுகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வைகை ஆற்றில் எந்த ஒரு பகுதியிலும் மணல் குவாரி அமைக்க விடமாட்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com