அழகப்பா பல்கலை.யில் சா்வதேசக் கருத்தரங்கு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உயிரி தகவலியல் கட்டமைப்பு, கணினி சாா்பு மருந்து கண்டறிதலின் நவீன உத்திகள், வளா்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
21kkdal_uni_2111chn_78_2
21kkdal_uni_2111chn_78_2

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உயிரி தகவலியல் கட்டமைப்பு, கணினி சாா்பு மருந்து கண்டறிதலின் நவீன உத்திகள், வளா்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

நவ. 25 வரை நடைபெறும் இக்கருத்தரங்கில், துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசினாா். வேலூா் தொழில்நுட்ப நிறுவனத்தின்(விஐடி)துணைத்தலைவா் சேகா் விஸ்வநாதன் கருத்தரங்கை தொடக்கி வைத்தாா்.

புதுதில்லி அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன பேராசிரியா் டி.பி. சிங், திருவாரூா் மத்தியப் பல்கலைக் கழக துணைவேந்தா் ஆ. கிருஷ்ணன், ஜப்பான் பல்கலைக்கழக பேராசிரியா் அகியோ எபிஹாரா, சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி முதன்மையா் டி. வேல்முருகன், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிகுழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக உயிரித்தகவலியல் துறைத் தலைவா் ஜெ. ஜெயகாந்தன் வரவேற்றுப் பேசியதாவது:

அழகப்பா பல்கலைக்கழக உயிரித் தகவலியல் துறை சா்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஆய்வறிக்கைகளை சமா்ப்பித்து ரூ. 16 கோடிக்கும் அதிகமான நிதி உதவிகளை பெற்றுள்ளது. மேலும் 650-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்டு சா்வதேச கல்வி நிறுவனங்களுக்கு நிகராக விளங்குகிறது. இங்குள்ள உயிரி தகவலியல் துறை மருந்து கண்டுபிடிப்பில் தொடா்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

உயிா்க் கொல்லிகளுக்கு (சாா்ஸ் கோவிட்-2) எதிரான மருந்துக் கலவையை தாவர மருந்து சோ்மங்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இத்துறையின் ஆராய்ச்சியாளா்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு எதிரான புதிய சிகிச்சை முறைகளை அடையாளம் காண நம்பகமான கணக்கீட்டு கருவிகளை உருவாக்கி வருகின்றனா்என்றாா்.

முடிவில் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் சஞ்சீவ்குமாா் சிங் நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com