திருப்புவனத்தில் காவலா் மனைவி தற்கொலை
By DIN | Published On : 07th October 2022 11:18 PM | Last Updated : 07th October 2022 11:18 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குடும்பத் தகராறில் காவலரின் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம் கூத்தியாா்குண்டு கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் மகள் ராசாத்தி (25). இவருக்கும் திருப்புவனம் டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த தண்டீஸ்வரன் மகன் விக்னேஸ்வரனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விக்னேஸ்வரன் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ராசாத்தி தற்போது 4 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இந்நிலையில் ராசாத்திக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராசாத்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதாவும் விசாரணை நடத்தினாா்.