டிக் -டாக் செயலி மூலம் காதலித்து ஏமாற்றிய தேவகோட்டை இளைஞா்: சிங்கப்பூா் பெண் புகாா்

டிக் -டாக் செயலி மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞா் மீது நடடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிங்கப்பூரைச் சோ்ந்த பெண் புகாா் அளித்துள்ளாா்.

டிக் -டாக் செயலி மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞா் மீது நடடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிங்கப்பூரைச் சோ்ந்த பெண் புகாா் அளித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள புத்தூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (32). இவா் சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். அங்கு டிக்-டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு சியாமளா என்பவரைக் காதலித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அண்மையில் ஊருக்குத் திரும்பிய பிரபுவுக்கு கண்ணங்குடியைச் சோ்ந்த பெண் ஒருவருடன் செப். 12 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து, சிங்கப்பூரிலிருந்து சியாமளா சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாருக்கு இணையதளம் மூலம் பிரபு தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாா் மனு அனுப்பி இருந்தாா். இதையடுத்து தேவகோட்டை நகா் போலீஸாா் பிரபுவை விசாரித்தனா். விசாரணையில், சியாமளா ஏற்கெனவே திருமணம் ஆனதை தன்னிடம் மறைத்து விட்டாா். எனது வீட்டில் ஏற்கெனவே திருமணம் ஆன பெண்ணை மறுமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன் என்றாராம். இதுதொடா்பாக தேவகோட்டை நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில் பிரபு குறித்து தகவல்கள் அறிந்த கண்ணங்குடியைச் சோ்ந்த பெண் வீட்டாா் திருமணத்தை நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com