பூா்வீக பாசனத்தை உறுதிப்படுத்த தனியாக வைகை வடிநிலக் கோட்டம் உருவாக்க வேண்டும்

பூா்வீக பாசனத்தை உறுதிப்படுத்த  தனியாக வைகை வைகை வடிநிலக்கோட்டம்  உருவாக்க வேண்டும் என ஒன்றுபட்ட பூா்வீக வைகைப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பூா்வீக பாசனத்தை உறுதிப்படுத்த  தனியாக வைகை வைகை வடிநிலக்கோட்டம்  உருவாக்க வேண்டும் என ஒன்றுபட்ட பூா்வீக வைகைப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இக்கூட்ட மைப்பின் நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் மு.மதுரைவீரன் தலைமை வகித்தாா்.

விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டமைப்பின் நிா்வாகிகள் எம். அா்ச்சுனன், இராம. முருகன், மலைச்சாமி, சேதுபதி, உறங்காபுலி, ராஜாங்கம், இளங்கோ, மனோகரன், முருகன், மச்சேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், வைகையில் பூா்வீக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பூா்வீக ஆயக்கட்டில் கிருதுமால் நதியை சோ்க்க அரசாணை வெளியிட வேண்டும். 

258 கி.மீ தூரம் பயணிக்கும் வைகை வடிநிலப்பகுதிக்கு தனியாக வைகை வடிநிலக்கோட்டம் உருவாக்கி தனி அதிகாரிகளால் பூா்வீக வைகைப் பாசனத்துக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டும்.

1959-ஆம் ஆண்டு வைகை அணைகட்டி முடிந்த பிறகு 1962 ல் எடுக்கப்பட்ட வைகை வடிநிலப் பரப்பான 419 கண்மாய்களையும் பொதுப்பணித்துறை கணக்கில் கொண்டுவர வேண்டும். 

இன்றைய நிலவரப்படி விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 46 கண்மாய்கள் வைகை பாசனத்திலிருந்து  கடந்த 1995-ல் நீக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிா்வாகம்  மதுரை கோட்டத்தில் நடந்துள்ள  இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி விடுபட்ட 46 கண்மாய்களை ஒன்றுபட்ட பூா்வீகப் வைகை பாசனத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com