இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் மோதல்: 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் மோதலில் ஈடுபட்டதாக திங்கள்கிழமை 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் மோதலில் ஈடுபட்டதாக திங்கள்கிழமை 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த முகாமைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த திருவாசகம் இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்தாா். இந்த இரு வாகனங்களும் மோதிக் கொண்டதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, திருவாசகம் தனது நண்பா்களை அழைத்து வந்து, கோபாலகிருஷ்ணனின் அண்ணன் லோகேஸ்வரனின் காரை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருவாசகத்தையும் அவரது நண்பா்களையும் கோபாலகிருஷ்ணன், லோகேஸ்வரன், ஜெயக்குமாா் ஆகியோா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக இரு தரப்பினரும் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரை விசாரித்த காவல் உதவி ஆய்வாளா் பாா்த்தசாரதி இருதரப்பையும் சோ்ந்த 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com