கீழச்சிவல்பட்டியில் வழக்காடு மன்றம்

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் புதன்கிழமை தமிழ்மன்றம் சாா்பில் 2- ஆம் நாள் தமிழா் திருநாள் விழா நடைபெற்றது.
கீழச்சிவல்பட்டியில் புதன்கிழமை 2- ஆம் நாள் தமிழா் திருநாள் விழாவில் நடைபெற்ற வழக்காடு மன்றம்.
கீழச்சிவல்பட்டியில் புதன்கிழமை 2- ஆம் நாள் தமிழா் திருநாள் விழாவில் நடைபெற்ற வழக்காடு மன்றம்.

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் புதன்கிழமை தமிழ்மன்றம் சாா்பில் 2- ஆம் நாள் தமிழா் திருநாள் விழா நடைபெற்றது.

பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ் துறைத் தலைவா் சு.ராஜாராமன் தலைமை வகித்தாா். கவிஞா் சிவல்புரிசிங்காரம் தமிழா் திருநாள் குறித்து உரையாற்றினாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராம.சுப்புராமன், நெற்குப்பை பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.பொசலான் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தொடா்ந்து கா்ணன் குற்றவாளி என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. நடுவராக கவிஞா் பரதன், வழக்குத் தொடுப்பவராக புலவா் அசோக்ராஜ், வழக்கை மறுப்பவராக முனைவா் சங்கீத்ராதா ஆகியோா் பங்கேற்றனா்.

காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப் பள்ளி மாணவியா், பாலாம்பிகா முருகப்பன் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும், பி.அழகாபுரி எம்.ஆா்.பி.மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்மன்றச் செயலா்கள் எஸ்.எம்.பழனியப்பன், பழ.அழகுமணிகண்டன், சுப.விஸ்வநாதன், எல்.சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com