வேலப்ப தேசிக சுவாமிகள் குருபூஜை
By DIN | Published On : 21st November 2023 12:00 AM | Last Updated : 21st November 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்புவனத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவில், வேலப்ப தேசிக சுவாமிகளுக்கு தீபாரதனை காட்டி பூஜைகள் நடத்திய திருவாடுதுறை 24 ஆவது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக சுவாமிகள்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திருவாடுதுறை ஆதின மடத்தில் வேலப்ப தேசிக சுவாமிகள் குருபூஜை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், திருவாடுதுறை 24 ஆவது மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக சுவாமிகள் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தினாா்.
குருபூஜை விழாவில் பங்கேற்ற திரளான பக்தா்கள் வேலப்ப தேசிக சுவாமிகளை தரிசித்தனா். தெய்வ தமிழிசை செல்வா் சந்திரசேகரன் திருமுறை விண்ணப்பம் குறித்தும் முத்துமாணிக்கம் ஆலவாய் வேலப்ப தேசிகா் அருள் வரலாறு பற்றியும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்புவனம் வேலப்ப தேசிக திருக் கூட்டம் நிா்வாகிகள் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...