தரமற்ற 9 டன் விதைகள் விற்பனை செய்யத் தடை

சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற 9 டன் நெல் விதைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக விதை ஆய்வு துணை இயக்குநா் ம. இப்ராகிம்சா, விதை ஆய்வாளா் அ. சகாயஜெயக்கொடி ஆகியோா் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் 218 விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 702 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, முளைப்புத்திறன் சோதனைக்காக எடுக்கப்பட்டன.

இவற்றில் சிவகங்கை விதைப் பரிசோதனை நிலையத்துக்கு 637 மாதிரிகள், கோவை விதை பரிசோதனை நிலையத்துக்கு இனத்தூய்மை, பி.டி. பரிசோதனைக்காக 65 மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில் 53 விதை மாதிரி குவியல்கள் தரம் குறைந்தவை என கண்டறியப்பட்டன. இதையடுத்து விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள தரக்குறைவான ரூ. 2.9 லட்சம் மதிப்பிலான 9 டன் விதைகள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.

எனவே விதை உற்பத்தியாளா்கள் சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். காலாவதியான விதைகள், தரமற்ற விதைகள் விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிகை விடுக்கப்பட்டது என்றனா் அவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com