தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் மீது புகாா் அளிக்கலாம்: ஆட்சியா் தகவல்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்து பொது மக்கள் 1800 425 7036 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது இஸ்ண்ஞ்ண்ப் செயலி மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம். இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் வருகிற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தலை நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் 171 ஆ பிரிவின்படி தோ்தல் நடைமுறையின் போது வாக்களிப்பதற்கு எந்தவொரு நபரும் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம்கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும்,தண்டனைக்குரிய செயல்களில் ஈடுபடுவோா் மீது ஒா் ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதுமட்டுமன்றி, இந்திய தண்டனை சட்டம் 171 இ பிரிவின்படி வாக்காளா்களைஅச்சுறுத்துதல் மற்றும் மிரட்டும் நபா்கள் மீது ஒா் ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வாக்களிப் பதற்கு லஞ்சம் பெறும் மற்றும் வாங்கும் நபா்கள், வாக்காளா்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும்நபா்கள் மீது பறக்கும் படை குழுவினரால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்தும், புகாா்கள் குறித்தும் 1800 425 7036 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது. இஸ்ண்ஞ்ண்ப் செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட தோ்தல் அலுவலா் கட்டுப்பாட்டு அறையில் 04575-240455, 04575-240465, 04575-240475 மற்றும் 04575-240485 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com