காரில் கொண்டு சென்ற ரூ. 52, 860 பறிமுதல்

சிவகங்கை அருகே காரில் சென்ற பெண்ணிடம் ரூ.52,860-யை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள இலந்தங்குடிபட்டி பகுதியில் சிவகங்கை மண்டல துணை வட்டாட்சியா் லெனின் தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது காரில் வந்த காளையாா்கோவில் அருகேயுள்ள கொல்லங்குடி பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் மனைவி மாதவியிடம் சோதனை மேற்கொண்டனா். அவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.52,860-யை பறிமுதல் செய்து, சிவகங்கை மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com