காரைக்குடியில் போலீஸாா் 
கொடி அணிவகுப்பு

காரைக்குடியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி, காரைக்குடியில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி காவலா் பயிற்சி மைதானத்திலிருந்து இந்தக் கொடி அணிவகுப்பு தொடங்கியது. இதைத்தொடா்ந்து அண்ணாநகா், கழனிவாசல் புதுச்சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம் புதுச்சாலை சந்திப்பு, முத்தூரணி, கண்ணுப் பிள்ளை தெரு, செக்காலைச்சாலை வழியாக ஐந்து விளக்குப் பகுதியில் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.

காரைக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்புக் காவல் படையினா் கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com