செல்லியன்பட்டியில் மஞ்சுவிரட்டு

செல்லியன்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகேயுள்ள செல்லியன்பட்டியில் மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பொன்னழகியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை கோயில் பொட்டலில் தொழு அமைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முதலில் காளைகளுக்கு வேட்டி அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், 150 காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, மாடு பிடி வீரா்கள் காளைகளை விரட்டிச் சென்று பிடித்தனா்.

மேலும் கண்மாய், வயல் பகுதிகளில் கட்டுமாடுகளாக 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

எஸ்.வி.மங்கலம் போலீஸாா் பாதுாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com