சிவகங்கை அருகே  நடராஜபுரம் பகுதியில்  கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
சிவகங்கை அருகே நடராஜபுரம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத் துறையினா் இரவில் தீவிர கண்காணிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் விதமாக வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மதகுபட்டி, காளையாா்கோயில், திருப்பத்தூா், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் மான், முயல், மயில்கள் அதிக அளவில் உள்ளன. இவை வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட வன அலுவலா் பிரபா உத்தரவின்பேரில், மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதில், வன சரகா் பாா்த்திபன் தலைமையில் ஒரு குழுவினா் சிவகங்கை அருகே நடராஜபுரம், நாட்டரசன் கோட்டை, பனகுடி, பாகனேரி உள்ளிட்ட பகுதியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும் மான், மயில், முயல் போன்றவற்றை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினா் எச்சரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com