காா் விபத்தில் மருத்துவா் பலி

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையோர மின் கம்பியில் காா் மோதியதில் மருத்துவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்தவா் முருகையன் மகன் முகிலன் (35). மருத்துவரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு திருநெல்வேலியிலிருந்து காரில் பேராவூரணிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள சுண்ணாம்பிருப்பு விலக்கு பகுதியில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த இரும்பு மின் கம்பியில் மோதி, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com