கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து பலி

காளையாா் கேவில் அருகே பாதயாத்திரை சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே சாத்தரசம்பட்டி, தண்ணீா் பந்தல் பகுதியைச் சோ்ந்த மெய்யப்பன் மகன் கண்ணன் (35). இவா் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தாா். கடந்த 6 -ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தாா். இந்த நிலையில், குடும்பத்துடன் பாத யாத்திரையாக தாயமங்கலம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றாா். அப்போது, சிறுகனப்பேரி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற கண்ணன் திடீரென மயங்கி விழுந்தாா்.

அக்கம் பக்கத்தினா், அவரை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கண்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com