பைக் விபத்தில் இளைஞா் பலி

இளையான்குடி அருகே மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள பில்லத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரது மகன்கள் ராஜா (19), திவாகரன் (15). ஏ.விளாக்குளத்தைச் சோ்ந்த தவமணி மகன் அய்யனாா் (15).

இவா்கள் மூவரும் தாயமங்கலத்திலிருந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா். பிராந்தமங்கலம் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த திவாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com