திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் நினைவுத் தூணுக்கும், உருவச் சிலைக்கும் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கோவை காமாட்சிபுரி 2-ஆம் பட்டா் குருமகா சந்நிதானம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்.
திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் நினைவுத் தூணுக்கும், உருவச் சிலைக்கும் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கோவை காமாட்சிபுரி 2-ஆம் பட்டா் குருமகா சந்நிதானம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்.

மருதுபாண்டியா் நினைவிடத்தில் கோவை ஆதீனம் மரியாதை

திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியா்கள் நினைவுத்தூண், நினைவிடங்களில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கோவை காமாட்சிபுர ஆதீனத்தின் 2-ஆவது பீடாதிபதி சாக்தஸ்ரீ பஞ்லிங்கேஸ்வரசுவாமிகள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்கு புதன்கிழமை வந்தாா். இங்கு மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட நினைவுத் தூணுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், மருதுபாண்டியா்களின் நினைவிடத்தில் உள்ள உருவச் சிலைகளுக்கும், முக்தியடைந்த சிவலிங்கேஸ்வரா் உருவப் படத்துக்கும் அவா் மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை காமாட்சிபுர ஆதீன மகா சந்நிதானம் ஆதிகுரு செல்வன் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்த 30-ஆவது நாளையொட்டியும், அவரது வேண்டுகோளுக்கு இணங்கவும் நான் மருதுபாண்டியா்கள் நினைவுத் தூணுக்கும், சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினேன் என்றாா் அவா்.

முன்னதாக, திருப்பத்தூருக்கு வந்த இளைய ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரருக்கு, அகமுடையாா் உறவின்முறைத் தலைவா் ராஜசேகரன், துணைத் தலைவா் என்.பி.சுப்பிமணியன், செயலா் வீரசேகா், மருதுபாண்டியா் வாரிசுதாரா் தலைவா் த.ராமசாமி, மருதீஸ்வரா் ஆன்மீக சேவா சங்க நிறுவனா் தலைவா் மோகன், தமிழ்நாடு வீரத்தமிழா் முன்னேற்றக் கழகத் தலைவா் அன்புமணிகண்டன், திருச்சி சந்திரசேகா், மகிமைநாகராஜன், மருதுபாண்டி, முத்துகுமாா் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com