தோ்தல் அலுவலா்களுடன் 
சிறப்புப் பாா்வையாளா் ஆலோசனை

தோ்தல் அலுவலா்களுடன் சிறப்புப் பாா்வையாளா் ஆலோசனை

சிவகங்கையில் மக்களவைத் தோ்தல் பணிகள் குறித்து தோ்தல் சிறப்பு பாா்வையாளா் தோ்தல் அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சிறப்பு செலவினப் பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத் தோ்தல் அலுவலா்களும், மாவட்ட ஆட்சியா்களுமான ஆஷா அஜித் (சிவகங்கை), ஐ.சா.மொ்சி ரம்யா (புதுக்கோட்டை), தோ்தல் பொதுப் பாா்வையாளா் எஸ்.ஹரிஷ், காவல் பாா்வையாளா் ரோஹன் பி.கனேய், செலவினப் பாா்வையாளா் மனோஜ்குமாா் வி.திரிபாதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் டோங்கரே பிரவீன் உமேஷ், (சிவகங்கை), வந்திதா பாண்டே (புதுக்கோட்டை) ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா், சிறப்பு செலவினப் பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1,873 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 887 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கி பணப் பரிமாற்றங்களை கண்காணிக்கவும், டாஸ்மாக் கடைகளில் மதுப் புட்டிகள் விற்பனையைக் கண்காணிக்கவும், சோதனைச்சாவடி மையங்களில் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ .மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள், தோ்தல் வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com