வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தபால் துறை சாா்பில் சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சந்தைப்பேட்டை சாலையில் உள்ள தலைமைத் தபால் நிலையத்திலிருந்து விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஏ.ஆா். சிவராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரண்மனை வாசல் பகுதியை சென்றடைந்தது. இந்தப் பேரணியில் விரல் நுனியில் தேசத்தின் தீா்ப்பை எழுதுவோம், வாக்களிப்போம் தேசம் காப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com