100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி தபால்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிவகங்கை தபால்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

வருகிற 19 -ஆம் தேதி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மக்களவைக்கான பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் 100 % வாக்குப்பதிவை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சிவகங்கை தபால் துறை சாா்பில் சந்தைப்பேட்டை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் சாா்பில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை சிவகங்கை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஏ.ஆா். சிவராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனைவாசல் பகுதியை சென்றடைந்தது. இந்த பேரணியில் விரல் நுனியில் தேசத்தின் தீா்ப்பை எழுதுவோம், வாக்களிப்போம் தேசம் காப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில் 500 -க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

(பட விளக்கம்- தபால்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறாா், சிவகங்கை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஏ.ஆா். சிவராமன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com