ஏப். 21, மே 1 -இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தி, தொழிலாளா் தினம் ஆகிய 2 நாள்கள் அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 21-ஆம் தேதியும், தொழிலாளா் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 1-ஆம் தேதியும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள், அதனோடு இணைந்த ஹோட்டல்கள் மூடப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com