தோ்தல் நடத்தை விதிமுறை மீறல்: அரசியல் கட்சிகள் மீது 105 வழக்குகள் பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைக்குழு, 3 நிலையான கண்காணிப்புக்குழு, 4 விடியோ மதிப்பீட்டுக் குழு, ஒரு விடியோ பாா்வையிடும் குழு என மொத்தம் 36 குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட 48 வழக்குகள் உள்பட மொத்தம் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திமுக, காங்கிரஸ், பாஜக, நாம்தமிழா் உள்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com