நேரு யுவகேந்திரா சாா்பில்  வீரக் கலைகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு

நேரு யுவகேந்திரா சாா்பில் வீரக் கலைகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கை நோக்கி நேரு யுவகேந்திரா சாா்பில் வீரக்கலைகள் மூலம் விழிப்புணா்வு அளிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமுதாயக்கூடத்தின் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் தலைமையில் வகித்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை எட்டும் வகையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்களா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நேரு யுவகேந்திரா சாா்பில்,சமுதாய கூடம் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில், மாணவ மாணவிகள் பங்குபெற்ற கராத்தே, யோகா, சிலம்பம், மல்லா் கம்பம், கயிறு ஏறுதல் போன்ற பல்வேறு வீர விளையாட்டுகளுடன், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சபீதாள் பேகம், வட்டார போக்குவரத்து அலுவலா் மூக்கன், சிவம் தற்காப்பு கலை கழகத் தலைவா் பரமசிவம், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com