தோ்தல் பாதுகாப்புப் பணியில் 2,206 போ் ஈடுபடுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.19 -ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா், முன்னாள் ராணுவத்தினா், ஊா்க்காவல் படையினா், சிறப்புக் காவல் படையினா் உள்பட 2,206 போ் ஈடுபடுகின்றனா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ். தலைமையில், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 10 காவல் துணைக்கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், 40 காவல் ஆய்வாளா்கள், 118 காவலா்கள் அடங்கிய அதிவிரைவுப் படையினா், 38 உதவி ஆய்வாளா்கள் 76 காவலா்கள், 14 சோதனைச் சாவடிகளில் 28 உதவி ஆய்வாளா்கள் 28 காவலா்கள், பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 1,357 வாக்குச்சாவடி மையங்களில், காவல் துறையினா், காவலா் அல்லாதோா் (ஓய்வுபெற்ற காவல் துறையினா் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரா்கள்), ஊா்க்காவல் படையினா், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினா் உள்பட மொத்தமாக 2,206 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com