துபைக்கு வேலைக்குச் சென்ற கணவரை மீட்டு தர கோரிக்கை

துபைக்கு வேலைக்குச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி கூத்தாண்டம் பகுதியை சோ்ந்த பெண் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.

துபைக்கு வேலைக்குச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி கூத்தாண்டம் பகுதியை சோ்ந்த பெண் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டம் பகுதியை சோ்ந்தவா் மதுபாலா (28) இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவா் பாா்த்திபன் (34) குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, துபை நாட்டுக்கு கட்டட வேலைக்குச் சென்றாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு, மதுபாலாவின் கணவா் பாா்த்திபன் தன்னை சிலா் அடிப்பது போன்ற விடியோவை மனைவி மதுபாலாவுக்கு அனுப்பினாா்.

இதைப்பாா்த்த அவரது மனைவி கடந்த 2 நாள்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

தோ்தல் நேரம் என்பதால் இரண்டு நாள்கள் கழித்து வரும்படி அதிகாரிகள் கூறியதையடுத்து, மதுபாலா தனது கைக் குழந்தைகளுடன் சனிக்கிழமை மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் சென்று தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com