மங்கள ஆஞ்சநேயா் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் கூட்டுக் கொல்லை மங்கள ஆஞ்சநேயா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் கூட்டுக் கொல்லை மங்கள ஆஞ்சநேயா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலையில் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து காலை 10.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com