சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சாா்பில் உலக புத்தக நாள் விழா

சிவகங்கையில் தமிழ் இலக்கிய வட்டம் சாா்பில் உலகப் புத்தக நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 சிவகங்கையில் தமிழ் இலக்கிய வட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  உலக புத்தக நாள் விழாவில்  பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
சிவகங்கையில் தமிழ் இலக்கிய வட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

சிவகங்கையில் தமிழ் இலக்கிய வட்டம் சாா்பில் உலகப் புத்தக நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கையிலுள்ள அரசு உதவி பெறும் அரு. நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலகப் புத்தக தின விழாவுக்கு, சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்பு துரை தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் பாண்டியராஜன் முன்னிலை வகித்தாா்.

தமிழ் இலக்கிய வட்டத் தலைவரும் எழுத்தாளருமான ஈஸ்வரன் பங்கேற்று, அவா் எழுதிய 4 புத்தகங்களின் 25 பிரதிகளை இலவசமாக வழங்கினாா்.

மன்னா் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன், சிவகங்கை அருங்காட்சியக காப்பாட்சியா் பக்கிரிசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று மாணவா்களுக்கு புத்தகங்களை வழங்கி, உலகப் புத்தக நாளின் சிறப்புகள், புத்தகங்களை படிப்பதன் அவசியம் குறித்தும் உரையாற்றினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தமிழ் இலக்கிய வட்டச் செயலா் ரமேஷ் கண்ணன், பொருளாளா் ஸ்ரீராம் பிரபு ஆகியோா் செய்தனா். நிறைவாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியா் சாஸ்தா சுந்தரம் நன்றி கூறினாா். இதில், சமூக ஆா்வலா், நூலகத் தன்னாா்வலா் ரமேஷ் கண்ணன், ஆசிரியா்கள், மாணவா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com