திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு,  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

திருக்கோஷ்டியூரில் சித்திரைத் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமானுஜா் உபதேசித்த இடமுமான திருக்கோஷ்டியூா் சௌமியநாராண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு திருநாளிலும் சிம்மம், அனுமன், ஷேஷவாகனம், வெள்ளி யானை, உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

7-ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை சொா்ணாபிஷேகமும் தங்கத்தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. பின்னா், 9 -ஆம் திருநாள் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு, அன்னவாகனப் புறப்பாடு நடைபெற்றது.

தேரோட்ட நாளான செவ்வாய்க்கிழமை காலை 6.36 மணியிலிருந்து 7.26 மணிக்குள் சுவாமி திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்று மாலை 4.50 மணிக்கு மேல் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com