திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

ஆலங்குடியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலங்குடி வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, கிராமத்தாா்கள் கோயிலிருந்து மேளதாளம், வானவேடிக்கையுடன் தொழுவை நோக்கி ஊா்வலமாகச் சென்றனா். அங்கு 50-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா்.

பின்னா், தொழுவிலிருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை இளைஞா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். பின்னா், வயல், கண்மாய் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டுத் திடலில் காயமடைந்த 15 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாச்சியாபுரம் காவல் ஆய்வாளா் கலைவாணி தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com