மாணிக்கநாச்சியம்மன் கோயில் 
சித்திரைத் திருவிழா

மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா்.

இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினாா். 8-ஆம் நாள் திருவிழாவாக செவ்வாய்க்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

புதன்கிழமை 9-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு, காலை 10 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம் சுமந்து கோயிலை வலம் வந்து தெற்குப்பட்டு மூலஸ்தானத்துக்கு சென்றனா்.

அங்கு அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, தெற்குபட்டு மூலஸ்தானத்திலிருந்து திருத்தோ் சப்பரத்தில் சுவாமி கோயிலை வந்தடைந்தது.

வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இரவு பூப்பல்லக்கில் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயில் வளாகத்தில் மாவிளக்கு எடுத்தும், கரும்புத் தொட்டில் எடுத்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com