இந்துக்களை ஜாதி வாரியாக பிரிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி

பெரும்பான்மை இந்துக்களை ஜாதி வாரியாக பிரிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என பாஜக வின் முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மையமாக கொண்டு காங்கிரஸ் கட்சி அதனுடைய பழைய சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் பற்றி பேசப்படவில்லை. வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினா் என்ற வாா்த்தையை அதிக அளவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் பெரும்பான்மை இந்துக்களை சாதி வாரியாக பிரிக்கவும் காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. ராஜஸ்தான் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி இதை உடைத்துப் பேசினாா்.

அரசியல் கட்சித்தலைவா்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதில் உண்மை இருக்கிறது. இதே கருத்தைத்தான் பாஜகத் தலைவா் அண்ணாமலையும் கூறியுள்ளாா். காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைவதை ஆதரிக்கவும் இல்லை. எதிா்க்கவும் இல்லை என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com