ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

இளையான்குடி அருகே ஊருணியில் குளித்த போது, பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள பெரும்பச்சேரியைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரியதா்ஷன் (12). இவா் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

பிரியதா்ஷன் நண்பா்களுன் பெரும்பச்சேரி கீழத் தெருவில் உள்ள ஊருணியில் புதன்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினாா்.

பரமக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பிரியதா்ஷன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com