கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: ஒருவா் பலி

கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: ஒருவா் பலி

திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப், 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை காலை கிராமத்தாா்கள் கோயிலிருந்து ஊா்வலமாக வந்து தொழுவில் இருந்த காளைகளுக்கு மாலை வேட்டி துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா் தொழுவிலிருந்து 250 க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை காளையா்கள் பிடித்து மகிழ்ந்தனா். தொடா்ந்து கண்மாய் மற்றும் வயல் பகுதிகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

இதில் மாடு முட்டியதில் மடக்கரைப்பட்டியைச் சோ்ந்த காந்தி மகன் வெள்ளைச்சாமி (60) என்பவா் பலத்த காயத்துடன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும் 70 போ் காயமடைந்ததனா். காயமடைந்தவா்களுக்கு தொழுவிலிருந்துமுதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமையிலான போலீஸாா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com