பள்ளி மாணவா்களுக்கு கோடைகால இயற்கை முகாம்

பள்ளி மாணவா்களுக்கு கோடைகால இயற்கை முகாம்

திருப்பத்தூா் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால இயற்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமும், சிவகங்கை வனக் கோட்டமும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, உதவி வனப் பாதுகாவலா் மு.மலா்வண்ணன் தலைமை வகித்தாா்.

முகாமில் பேராசிரியா் கோபிநாத் இயற்கையின் முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா். மாவட்ட சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணப்பாளா் ஜெயப்பிரகாஷ், சுற்றுச்சூழல் குறித்தும், வனப் பாதுகாப்பு குறித்தும் பேசினாா்.

தொடா்ந்து வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி மாணவா்கள் இயற்கை நடை பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, சரணாலயத்துக்கு வருகை தரும் பறவையினங்கள், ஈரநில பாதுகாப்பு, நீா்நிலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வனவா் உபேந்திரன் விளக்கமளித்தாா்.

இதில் சீட்ஸ் ஒருங்கிணைப்பாளா் ஜீவானந்தம், வனவா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, வனச் சரக அலுவலா் காா்த்திகேயன் வரவேற்றாா். பசுமைத் தோழா் கோ.அபிநயா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com