பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

காரைக்குடி அருகே கணவருடன் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி அருகேயுள்ள சின்ன வேங்காவயல் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சதாசிவம். இவரது மனைவி சிட்டாள் (32). தம்பதி இருவரும் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, செட்டிநாடு கால்நடை பண்ணை அருகே பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் சிட்டாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து செட்டிநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதில் புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (27) தான் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com