முன்னாள் பெண் காவலா் புகாா்: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

முன்னாள் பெண் காவலரை ஏமாற்றியதாக காரைக்குடி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் அருகேயுள்ள கருத்தம்பட்டியைச் சோ்ந்தவா் சுமதி (35). காவலராக பணியாற்றிய இவா், கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாா்.

இந்த நிலையில், இவருக்கும், காரைக்குடி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் சிவகுமாருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, காரைக்குடி வள்ளுவா் தெருவில் தனியாக வீடு எடுத்து இருவரும் சோ்ந்து வசித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில் தற்போது, 8 மாத கா்ப்பிணியாக உள்ளதாகவும், உதவி ஆய்வாளா் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் காரைக்குடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் சுமதி புகாா் அளித்தாா்.

இதுகுறித்த தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு சென்றதையடுத்து ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவா் துரை உதவி ஆய்வாளா் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com