ஸ்ரீ ராஜராஜன் கல்வி நிறுவனங்களில் மலேரியா நோய் தடுப்பு விழிப்புணா்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரிலுள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் வியாழக்கிழமை மலேரியா நோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ ாாஜராஜன் கல்விக் குழுமம், சாக்கோட்டை வட்டார பொது சுகாதாரத் துறை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மருத்துவா் கே.சமீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: மலேரியா நோய் அதிகமாக கடற்கரையையொட்டி அமைந்துள்ள பகுதிகளிலிருந்துதான் பரவுகிறது. உகல அளவில் மலேரியா நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்பிரிக்க நாடு முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்த நோய்த் தடுப்பு மருந்துகளினால் 80 சதவீதம் உயிரிழப்பு குறைந்திருக்கிறது.

மலேரியா நோய் அறிகுறிகளாக காய்ச்சல், உடல்வலி ஏற்படும். நரம்புகள் அதிகமாக பாதிக்கப்படும். எனவே, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ள முயற்சிக்காமல் உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதார மேற்பாா்வையாளா் கே.முத்துவேல், சுகாதார ஆய்வாளா்கள் எஸ். கபிபுல் ரகுமான், எம். நடராஜன், கல்லூரியின் மக்கள் தொடா்பு அலுவலா் கே. இகோஜிராவ், ஸ்ரீ ராஜராஜன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையா் எம். சிவகுமாா், கே.சி. பழனிவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ஆா். சிவக்குமாா் வரவேற்றாா். ஸ்ரீ ராஜராஜன் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியை என். ராஜேஸ்வரி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com