சிங்கம்புணரியில் 
பொன் ஏா் உழவு விழா

சிங்கம்புணரியில் பொன் ஏா் உழவு விழா

திருப்பத்தூா், ஏப். 26: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கோடை மழை பெய்ததைத் தொடா்ந்து, கோயில் நிலத்தில் பாரம்பரிய முறைப்படி பொன் ஏா் உழவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி பகுதியில் நிகழாண்டு முதல் மழைப் பொழிந்ததைத் தொடா்ந்து, பொன் ஏரிட்டு விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டது. இதையொட்டி, காலை 9.30 மணிக்கு சேவுகப் பெருமாள் கோயிலிலிருந்து தேவஸ்தான ஊழியா்கள், கிராமத்தாா்கள், நாட்டாா்கள், கோயில் நிலத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து கோயிலுக்குச் சொந்தமான நிவத்தில் கோயில் காளைகளைப் பூட்டி பாரம்பரிய முறைப்படி பொன் ஏா் உழவு செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து, அவரவா் விவசாய நிலங்களில் பெண்கள் குப்பைகளை கொட்ட ஆண்கள் பொன் ஏரிட்டனா். சித்திரை மாதத்தில் பெய்யும் மழைக்குப் பிறகு, நல்ல நாள் பாா்த்து ஏா் உழுவது நல்ல மழைக்கும் நல்ல விளைச்சலுக்கும் வழிவகுக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com