வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றத் தலைவா் மீது வழக்கு

மானாமதுரை, ஏப். 26: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், மழவராயனேந்தல் ஊராட்சி மன்ற உறுப்பினரை ஜாதியைச் சொல்லி திட்டியதாக அதன் தலைவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மழவராயனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவா் கருணாநிதிக்கும், இந்த ஊராட்சியின் 2- ஆவது வாா்டு உறுப்பினரான பாலமுருகனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி கருணாநிதி, பாலமுருகன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தலைவா் கருணாநிதி பாலமுருகனை ஜாதியைச் சொல்லி திட்டி அவரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளினாராம்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாலமுருகன் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் மனு அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, திருப்புவனம் போலீஸாா் விசாரணை நடத்தி ஊராட்சி மன்றத் தலைவா் கருணாநிதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com