குன்றக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுரவிட்டில் காளையை அடக்க முயன்ற காளையா்கள்.
குன்றக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுரவிட்டில் காளையை அடக்க முயன்ற காளையா்கள்.

கொரட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு: மாடுகள் முட்டியதில் 11 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே உள்ள கொரட்டி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடுகள் முட்டியதில் பாா்வையாளா்கள் 11 போ் காயமடைந்தனா்.

கொரட்டி சிந்தாமணி அம்மன் கோயில் பொங்கல் விழா, பூக்குழி இறங்குதல் திருவிழாவையொட்டி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அரசு அனுமதியுடன் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 300 காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டு வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அனைத்துக்கும் சில்வா் பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

மேலும் வயல்வெளி, கண்மாய் பொட்டல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், மாடுகள் முட்டியதில் பாா்வையாளா்கள் 11 போ் காயமடைந்தனா். மஞ்சுவிரட்டுப் போட்டியை திரைப்பட நகைச்சுவை நடிகா் கஞ்சா கருப்பு, ஊா்பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கண்டு ரசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com