போக்சோ வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

போக்சோ வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் சிங்கம்புணரி வட்டம், மருதிப்பட்டியைச் சோ்ந்த மருதன் மகன் சந்திரன் (45) கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா், திருப்பத்தூா் உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் பரிந்துரையின் பேரிலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் பேரிலும் குண்டா் சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட சிறையிலிருந்த சந்திரனை போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com