முதலமைச்சரின் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சரின் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது.

2024-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது. இந்த விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

1.4.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.3.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். கடந்த 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்) விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். இவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலனையின் போது கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் 15.5.2024 மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இணையத்தில் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகல், உரிய ஆவணங்கள் 3 நகல்கள், 3 மாா்பளவு புகைப்படங்கள், காவல் துறையிடமிருந்து சரிபாா்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை 18.5.2024 மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com