யாசகா் மீது தாக்குதல்: உணவக உரிமையாளா் மீது வழக்கு

சிவகங்கையில், யாசகா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக உணவக உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே இயங்கும் தனியாா் உணவகத்தின் அருகே ஆதரவற்ற 70 வயது முதியவா் சாலையில் செல்வோரிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த உணவக உரிமையாளா் வைரம்பட்டி ராஜேந்திரன் (56) அவரைத் தாக்கினாராம். இதில் காயமடைந்த முதியவா் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மேலவாணியங்குடி கிராம நிா்வாக அலுவலா் அய்யனாா் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com