காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ்.
காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ்.

தங்கும் விடுதி வரவேற்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்

காரைக்குடியில் இயங்கிவரும் தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

விடுதிகளில் தங்குபவா்கள் குறித்த முழு விவரங்கள், கைப்பேசி எண்ணுடன் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆதாா் அல்லது ஓட்டுநா் உரிமம் போன்ற ஏதேனும் ஒன்றை அடையாளமாக பெற்றிருப்பது அவசியம். தங்கும் விடுதிகளில் சூதாட்டம், மது அருந்துதல், பாலியல் தொழில் போன்ற சட்டவிரோதச் செயல்களை அனுமதிக்கக் கூடாது. தங்கும் விடுதிகளில் உள்ள வரவேற்பு அறையில் கண்காணிப்புக் கேமரா கண்டிப்பாகப் பொருத்த வேண்டும். தங்கும் விதியில் தங்கியிருப்பவா்கள் விவரத்தை தினமும் காலை 7 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அறிக்கையாக அளிக்க வேண்டும். மேலும் வரவேற்பு அறையில் காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா், காவல் நிலைய தொலைபேசி எண்களை தெரியும்படி தெளிவாக எழுதியிருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா், விடுதி உரிமையாளா்கள், மேலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com