அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் புவி அமைப்பியல் துறையின் 1971 - 1974 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு துறைத் தலைவா் உதயகணேசன் தலைமை வகித்தாா். புவி அமைப்பியல் துறையின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவரும், இந்தத் துறையின் முன்னாள் பேராசிரியருமான லாரன்ஸ் சிறப்புரையாற்றினாா்.

பரோடா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற புவி அமைப்பியல் துறை பேராசிரியரும், முன்னாள் மாணவருமான கணபதி முன்னாள் மாணவா்களை அறிமுகப்படுத்தினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை புவி அமைப்பியல் துறை முன்னாள் மாணவா் சங்கப் பொருளாளா் கணேசன் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com